செவ்வாய், டிசம்பர் 6

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}291-300

அறத்துப்பால் துறவறவியல் வாய்மை;;;;;;;;;;;;;

குறள் 291: 
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் 
தீமை இலாத சொலல்.

விளக்கம் :  
பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

குறள் 292: 
பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த 
நன்மை பயக்கும் எனின்.

விளக்கம் :  
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்.


குறள் 293: 
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் 
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

விளக்கம் :  
மனச்சாட்சிக்கு எதிராகப் பொய் சொல்லக்கூடாது; அப்படிச் சொன்னால்,சொன்னவரின் மனமே அவரைத் தண்டிக்கும்.

குறள் 294: 
உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன். 

விளக்கம் :  
மனத்தால்கூடப் பொய்யை நினைக்காமல் வாழ்பவர்கள், மக்கள் மனத்தில் நிலையான இடத்தைப் பெறுவார்கள்.

குறள் 295: 
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு 
தானஞ்செய் வாரின் தலை. 

விளக்கம் :  
உதட்டளவில் இன்றி உளமார வாய்மை பேசுகிறவர்கள் தவமும், தானமும் செய்கின்றவர்களைவிட உயர்ந்தவர்களாவார்கள்.

குறள் 296: 
பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை 
எல்லா அறமுந் தரும். 

விளக்கம் :  
பொய் இல்லாமல் வாழ்வது போன்ற புகழ் மிக்க வாழ்வு வேறு எதுவுமில்லை; என்றும் நீங்காத அறவழி நலன்களை அளிப்பது அந்த வாழ்வேயாகும்.

குறள் 297: 
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று. 

விளக்கம் :  
செய்யக்கூடாததைச் செய்யாததால் விளையும் நன்மையைவிடப் பொய் கூறாத பண்பு பொய்த்துப் போகாமல் கடைப்பிடிக்கும் அறவழி நன்மை தருவதாகும்.

குறள் 298:
புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை 
வாய்மையால் காணப் படும்.

விளக்கம் :  
நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.

குறள் 299: 
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் 
பொய்யா விளக்கே விளக்கு. 

விளக்கம் :  
புறத்தின் இருளைப் போக்கும் விளக்குகளைவிட அகத்தின் இருளைப் போக்கும் பொய்யாமை எனும் விளக்கே ஒருவனை உயர்ந்தோன் எனக் காட்டும் ஒளிமிக்க விளக்காகும்.


குறள் 300: 
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் 
வாய்மையின் நல்ல பிற. 

விளக்கம் :  
வாய்மையைப் போல் சிறந்த பண்பு வேறொன்றுமே இல்லை என்பதுதான் ஆராய்ந்து உணரப்பட்ட உண்மையாகும்.


எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............

ஞாயிறு, டிசம்பர் 4

திருக்குறள் இசைத்தமிழ் - இசைக் குறுவட்டுகள்- இலவமாகப் பதிவிறக்கம் செய்ய.........

இவை எனக்கு கிடைத்தவை இன்னும் உள்ளது உங்களுக்கு கிடைத்தால் அனுப்பி உதவும்  நன்றி ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;samy


இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்களைப் பயன்படுத்தி இசைக் கோப்புக்களை இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


குறுவட்டு - 1

குறுவட்டு - 2

குறுவட்டு - 3

குறுவட்டு - 4

குறுவட்டு - 5

குறுவட்டு - 6

குறிப்பு: பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய, கொடுக்கப்பட்டுள்ள பாடல் இணைப்பில் வலமாகச் சொடுக்கி பின் "Save Target As..." அல்லது "Save Link As..." என்ற கட்டளையைத் தெரிவு செய்து தங்கள் கணினியில் சேமிக்கவும்.

இவை எனக்கு கிடைத்தவை இன்னும் உள்ளது உங்களுக்கு கிடைத்தால் அனுப்பி உதவும்  நன்றி ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;samy;;;;;;;;;;;;;;;;;;;;

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}281-290

அறத்துப்பால் துறவறவியல் கள்ளாமை,,,,,,,,,,,,,,,,,,



குறள் 281:
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

விளக்கம் :
அடுத்தவர் நம்மை இகழக்கூடாது என்று எண்ணுபவன், அடுத்தவர்க்குரிய எந்தப் பொருளையும் மனத்தால்கூடத் திருட நினைக்கக்கூடாது.

குறள் 282:
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

விளக்கம் :
பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

குறள் 283:
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.

விளக்கம் :கொள்ளையடித்துப் பொருள் குவிப்பது, முதலில் பெரிதாகத் தோன்றினாலும், அந்தச் செயல் ஏற்கனவே இருந்த செல்வத்தையும் அடித்து கொண்டு போய்விடும்.

குறள் 284:
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

விளக்கம் :
அடுத்தவர் பொருளைத் திருடும் ஆசை, நிறைவேறியபின் அழியாத துன்பத்தைத் தரும்.

குறள் 285:
அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

விளக்கம் :
மறந்திருக்கும் நேரம் பார்த்துப் பிறர் பொருளைக் களவாட எண்ணுபவரிடத்தில், அருள் கருதி அன்பாக நடக்கும் பண்பு இருக்காது.

குறள் 286:
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

விளக்கம் :
உயிர்களை நேசிக்கும் ஆசை இல்லாதவரே அடுத்தவர் பொருளைத் திருடும் பேராசை உடையவர் ஆவர்.

குறள் 287:
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.

விளக்கம் :
அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.

குறள் 288:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

விளக்கம் :
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

குறள் 289:
அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

விளக்கம் :
அடுத்தவர் பொருளைத் திருடுவதைத் தவிர வேறொன்றும் தெரியாதவர் தகுதி அற்ற அந்தச் செயல்களாலேயே அழிந்து போவார்.

குறள் 290:
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.

விளக்கம் :
களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy

வியாழன், டிசம்பர் 1

திருக்குறளும் அதன் விளக்கமும்}}}}}}271-280

அறத்துப்பால் துறவறவியல் கூடாவொழுக்கம்.................




குறள் 271:  
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் 
ஐந்தும் அகத்தே நகும். 


விளக்கம் :  
வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.   


குறள் 272:  
வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம் 
தான்அறி குற்றப் படின்.  


விளக்கம் :  
தன் மனத்திற்குக் குற்றம் என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர், துறவுக்கோலம் பூண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.  


குறள் 273:  
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 


விளக்கம் :  
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.  


குறள் 274:  
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து 
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.


விளக்கம் :  
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈ.டுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.  


குறள் 275:  
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று 
ஏதம் பலவுந் தரும்.  


 விளக்கம் :  
எத்தகைய செயல் புரிந்துவிட்டோம் என்று தமக்குத் தாமே வருந்த வேண்டிய துன்பம், பற்றுகளை விட்டு விட்டதாகப் பொய்கூறி, உலகை ஏமாற்றுவோர்க்கு வந்து சேரும்.  


குறள் 276:  
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து 
வாழ்வாரின் வன்கணார் இல்.  


விளக்கம் :  
மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.  


குறள் 277:  
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி 
முக்கிற் கரியார் உடைத்து.  


விளக்கம் :  
வெளித்தோற்றத்துக்குக் குன்றிமணி போல் சிவப்பாக இருந்தாலும், குன்றிமணியின் முனைபோலக் கறுத்த மனம் படைத்தவர்களும் உலகில் உண்டு.  


குறள் 278: 
மனத்தது மாசாக மாண்டார் நீராடி 
மறைந்தொழுகு மாந்தர் பலர்.  


விளக்கம் :  
மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் - இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.  


குறள் 279:  
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன 
வினைபடு பாலால் கொளல்.  


விளக்கம் :  
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன் தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது. மக்களின் பண்புகளையும் செயல்வகையால் உணர்ந்துகொள்ள வேண்டும்.  


குறள் 280:  
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் 
பழித்தது ஒழித்து விடின்.  


விளக்கம் :  
உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா