பொருட்பால் - அரசியல் - இறைமாட்சி;;;;;;;;;;;;;;;;;;;;;
குறள் 381:
குறள் 382:
குறள் 383:
குறள் 384:
குறள் 385:
குறள் 386:
குறள் 387:
குறள் 388:
குறள் 389:
குறள் 390:
பொருட்பால் - அரசியல் - கல்வி;;;;;;;;;;;;;;;;;
குறள் 391:
குறள் 392:
குறள் 393:
குறள் 394:
குறள் 395:
குறள் 396:
குறள் 397:
குறள் 398:
குறள் 399:
குறள் 400:
எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............
குறள் 381:
படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்உரை:
உடையான் அரசருள் ஏறு.
ஆற்றல்மிகு படை, அறிவார்ந்த குடிமக்கள், குறையா வளம், குறையற்ற அமைச்சு, முரிபடாத நட்பு, மோதியழிக்க முடியாத அரண் ஆகிய ஆறு சிறப்புகளும் உடையதே அரசுகளுக்கிடையே ஆண் சிங்கம் போன்ற அரசாகும்.
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்உரை:
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை
எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்உரை:
நீங்கா நிலனான் பவர்க்கு.
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
குறள் 384:
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காஉரை:
மானம் உடைய தரசு.
அறநெறி தவறாமலும், குற்றமேதும் இழைக்காமலும், வீரத்துடனும், மானத்துடனும் ஆட்சி நடத்துபவர்களே சிறந்தவர்களாவார்கள்.
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்தஉரை:
வகுத்தலும் வல்ல தரசு.
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
குறள் 386:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்உரை:
மீக்கூறும் மன்னன் நிலம்.
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.
குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்உரை:
தான்கண் டனைத்திவ் வுலகு.
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும்.
குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்குஉரை:
இறையென்று வைக்கப் படும்.
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப்படுவான்.
குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்உரை:
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும்.
குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்உரை:
உடையானாம் வேந்தர்க் கொளி.
நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலையுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும்.
பொருட்பால் - அரசியல் - கல்வி;;;;;;;;;;;;;;;;;
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்உரை:
நிற்க அதற்குத் தக.
பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.
குறள் 392:
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்உரை:
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.
குறள் 393:
கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுஉரை:
புண்ணுடையர் கல்லா தவர்.
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.
குறள் 394:
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்உரை:
அனைத்தே புலவர் தொழில்.
மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவிற் சிறந்தோர் செயலாகும்.
குறள் 395:
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்உரை:
கடையரே கல்லா தவர்.
அறிவுடையார் முன் அறிவில்லாதவர் போல் தாழ்ந்து நின்று, மேலும் கற்றுக்கொள்பவர்களின் ஆர்வத்தைக் கற்றுக் கொள்ளாதவர்கள் கடைநிலை மாந்தராக கருதப்படுவார்கள்.
குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்உரை:
கற்றனைத் தூறும் அறிவு.
தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும்.
குறள் 397:
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்உரை:
சாந்துணையுங் கல்லாத வாறு.
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?.
குறள் 398:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஉரை:
எழுமையும் ஏமாப் புடைத்து.
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
குறள் 399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டுஉரை:
காமுறுவர் கற்றறிந் தார்.
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்.
குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்குஉரை:
மாடல்ல மற்றை யவை.
கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை.
எனது தவறுகளையும் குறைகளையும் சுட்டிக் காட்டுங்கள். தொடரும்....samy..............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக